கொல்லிமலை
கோடை கால சுற்றுலாவில், கொல்லி மலை ஏனோ இடம் பெறுவதில்லை. 70 'ஹேர்பின்' வளைவுகளைக் கொண்ட கொல்லி மலை, மற்ற மலைவாசஸ்தலங்களைப் போல பிரபலம் ஆகவில்லை. ஏனெனில் கொல்லிமலையை சித்தர்கள் வாழ்ந்த, இன்னும் வாழ்கின்ற ஆன்மிகம் சார்ந்த புனித மலையாக கருதுவதால், இன்ப சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தின் எல்லா கோடைவாசஸ்தலங்களிலும் கோடை விழா, கோடையில் தான் நடத்தப்படும். ஆனால் கொல்லி மலையில் மட்டும் விழா, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்று நடத்தப்படும். கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியைச் சிறப்பிக்கும் வகையில்தான், கொல்லி மலையில் கோடை விழா நடைபெறும். கொல்லி மலையில் தமிழக அரசு நடத்தும் தங்கும் விடுதிகள் மட்டுமே உள்ளன. தனியார் விடுதிகள் இல்லை.