Wednesday, July 30, 2014

மரபணு மாற்று பயிர் ஆய்வுக்கு அஞ்சும் அமெரிக்கா, ஐரோப்பா: ஆபத்தை உணராமல் அவசரம் காட்டும் இந்தியா

மரபணு மாற்று பயிர்களுக்கு வயல்வெளி ஆய்வு நடத்துவதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், 'அடக்கி' வாசிக்கும் நிலையில், இந்தியாவில் அதற்கு அவசரம் காட்டுவது ஏன்?' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:கடந்த ஆண்டு, மே மாதம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையில், மரபணு மாற்று கோதுமை கலந்திருப்பது கண்டறியப்பட்டு, அதை, ஜப்பான் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவில் இருந்து அதிகளவில், கோதுமை இறக்குமதி செய்யும் ஜப்பான், அதற்கான தன் ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.அமெரிக்க கோதுமையை அதிகளவில் இறக்குமதி செய்யும், சீனா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா நாடுகளும், இதனால், கடும் அதிர்ச்சி அடைந்தன.அமெரிக்காவின், ஓரிகான் மாகாணத்தில் உள்ள, 'மான்சான்டோ' நிறுவன மரபணு மாற்று பரிசோதனை நிலத்தில் இருந்து வெளியேறி, மற்ற விவசாயிகள் விளைவித்த கோதுமையில், இக்கலப்படம் நடந்தது கண்டறியப்பட்டது.

ஐரோப்பிய துறைமுகங்களுக்கு, மரபணு மாற்று உணவு பொருட்கள் வருகிறதா என்பதை கண்காணிக்கவும், அந்நாடுகள் உத்தரவிட்டன. அமெரிக்காவில் இருந்து வரும் கோதுமை, தீவிர ஆய்விற்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படும் எனவும், ஐரோப்பிய நாடுகள் தெரிவித்தன. 'கலப்படம் கண்டறியப்பட்டால், கப்பல் அப்படியே திருப்பி அனுப்பப்படும்' எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.இதனால், அமெரிக்காவிற்கு அன்னிய செலாவணி இழப்பும், விவசாயிகள், ஏற்றுமதியாளர்களுக்கு நஷ்டமும் ஏற்பட்டது. இதேபோல, 2006ல், 'பேயர்' என்ற நிறுவனம் மரபணு மாற்று நெல்லை பயன்படுத்தி, வயல்வெளி ஆய்வுக்கு உட்படுத்தியது. அதுவும், மற்ற நிலங்களுக்கு பரவி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதில் கலப்படம் உள்ளது, ஜப்பானில் கண்டறியப்பட்டது.

இதனால், அமெரிக்க நெல் இறக்குமதிக்கு, பல நாடுகள் தடை விதித்ததால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண விவசாயிகளுக்கு, பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அமெரிக்க விவசாயிகள், 'பேயர்' நிறுவனம் மீது, வழக்கு தொடர்ந்தனர். 75 கோடி டாலர்களை நஷ்ட ஈடாக வழங்கி, இந்த வழக்கை கோர்ட்டிற்கு வெளியே, 'பேயர்' நிறுவனம் முடித்துக் கொண்டது.மரபணு மாற்று பயிர்களில் நடந்த கலப்படம் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பாடத்தை கற்று தந்துள்ளது. இது ஒருபுறம் நடக்க, 2011 டிசம்பரில், மத்திய அரசின் மரபணு மாற்று தொழிற்நுட்ப அனுமதிக் குழு, 'மான்சான்டோ-' நிறுவனம் தயாரித்த மரபணு மாற்று கோதுமைக்கு வயல்வெளி ஆய்வு நடத்த அனுமதி அளித்தது.

ஆனால், மகாராஷ்டிர மாநில அரசு அதற்கு இதுவரை அனுமதி சான்றிதழ் வழங்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம், தன் மற்றொரு மரபணு மாற்று கோதுமையை, வயல்வெளி ஆய்வு செய்யவும், அந்நிறுவனம் அனுமதி கேட்டது.ஆட்சி மாறிய நிலையில், தற்போது மத்திய அரசின் மரபணு மாற்று தொழிற்நுட்ப அனுமதிக் குழு, வயல்வெளி ஆய்வு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.சோதனைகளையும், கட்டுபாடுகளையும் முறையாக வைத்துள்ள அமெரிக்காவிலேயே, மரபணு மாற்று கலப்படம் நடந்தது, அந்நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது.ஐரோப்பிய நாடுகளில், மக்களின் எதிர்ப்பு காரணமாக, மரபணு மாற்றுப்பயிர் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடங்களை, மரபணு மாற்று விதைகளை உருவாக்கும் நிறுவனங்கள், மூடிவிட்டன.

ஆனால், அதிநவீன தொழிற்நுட்பமும் இல்லாமல், சாதாரண முறையில், விவசாயம் நடக்கும் இந்தியாவில், மரபணு மாற்று பயிர்களை வயல்வெளி ஆய்வுசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, நல்ல முடிவாக தெரியவில்லை. இவ்விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு, மரபணு மாற்று வயல்வெளி ஆய்வுக்கு தடை விதிப்பார் என, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நம்புகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தன் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, மரபணு மாற்று பயிர்களுக்கான வயல்வெளி பரிசோதனைக்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார் எனவும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
வேளாண் பொருளாதாரம் என்ற படிப்பை அறிவோமா?

அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் என்ற பெயரை கேட்டதும், பலருக்கும் ஒரு விஷயம் புரிந்திருக்கும். வேளாண்மை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டு துறைகளின் அம்சங்களும் கலந்த ஒரு துறை என்பதுதான் அது.

வேளாண் வணிகத்தில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்வது, உற்பத்தி முறைகள் மற்றும் வேளாண் வணிகத்தில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பது போன்றவற்றில், பொருளாதார கோட்பாடுகளை பயன்படுத்துவதுதான் அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ். இப்படிப்பு, அக்ரோனாமிக்ஸ் என்றும் அழைக்ப்படுகிறது. இது ஒரு முதுநிலைப் பட்டப் படிப்பு.

இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில், அக்ரோனாமிக்ஸ் படிப்பு பிரபலமடைந்தது. வேளாண் பொருட்களுக்கான சந்தை மதிப்பு மற்றும் தேவையை கணித்தல், பயிர்களை மேற்பார்வையிடுதல், விலைகளை நிர்ணயித்தல், கால்நடைகளின் நலனை கவனித்தல் ஆகிய பணிகளோடு,
உபகரணங்கள், ஏற்றுமதி - இறக்குமதி மற்றும் உற்பத்தி தொடர்பான புதிய முறைகள் போன்றவற்றையும் வேளாண் பொருளாதார நிபுணர் (Agricultural Economist) கவனிக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில், இத்துறைக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
கிராமப்புற நிதி மற்றும் நிறுவனங்கள், உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வள பொருளாதாரம் ஆகியவை பல்வேறு பிரிவுகளை இத்துறை உள்ளடக்கியுள்ளது. வேளாண் உற்பத்தி சார்ந்த அறிவோடு, நன்கு பயிற்சிபெற்ற மாணவர்களின் தேவை, இத்துறையில் பெரியளவில் அதிகரித்து வருகிறது. இதன்மூலம், இத்துறையில் கூடுதல் பணி வாய்ப்புகள் ஏற்படுகின்றன. வேளாண் உற்பத்தி, சந்தைப்படுத்தல், நிதி, பாதுகாப்பு உள்ளிட்ட பிரிவுகளில், பப்ளிக் சர்வீஸ் பணி வாய்ப்புகள், தேசிய, மாநில மற்றும் உள்ளூர் நிலைகளில் கிடைக்கப் பெறுகின்றன.

அக்ரிகல்சுரல் எகனாமிக்ஸ் படித்த மாணவர்கள், கமர்ஷியல் மற்றும் பண்ணை வங்கிகள் போன்ற கடன்தரும் நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகளைப் பெறலாம். பொருளாதார தாராளமயமாக்கல் உலகில், சர்வதேச நிறுவனங்கள் பெருகி வருவதால், சர்வதேச வேளாண்மை மற்றும் மேம்பாட்டு துறையில் கிடைக்கும் பணி வாய்ப்புகள் அதிக சம்பளம் நிறைந்தவை. எனவே, இந்த வாய்ப்புகளைப் பெறுவதற்கு மாணவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

சில முக்கிய இந்திய கல்வி நிறுவனங்கள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர்
பிர்சா வேளாண் பல்கலை - ராஞ்சி, ஜார்க்கண்ட்
சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலை - கான்பூர், உத்திரப் பிரதேசம்
வேளாண்மை கல்லூரி - பீகானீர், ராஜஸ்தான்
கேரள வேளாண்மை பல்கலை - திருச்சூர்
சர்தார் வல்லபாய் பட்டேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலை - மீரட், உத்திரப் பிரதேசம்
வேளாண் அறிவியலுக்கான பல்கலை - பெங்களூர்
சத்ரபதி சாகுஜி மகராஜ் பல்கலை - கான்பூர், உத்திரப்பிரதேசம்
இந்திரா காந்தி வேளாண் பல்கலை - ராய்ப்பூர்
அலகாபாத் பல்கலை - அலகாபாத், உத்திரப் பிரதேசம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் - டில்லி
பனாரஸ் இந்து பல்கலை - பனாரஸ்
ஆச்சார்யா என்.ஜி. ரங்கா வேளாண் பல்கலை - ஐதராபாத்.

Tuesday, July 22, 2014

இந்தியாவின் தேசிய மொழி என்ன ?

இந்த கட்டுரை ஹிந்தி மொழிக்கு எதிரானது அல்ல. நான் ஹிந்தியை வெறுப்பவனும் அல்ல. அதே சமயம் தமிழ் மொழி வெறி பிடித்தவனும் அல்ல.நாளைக்கே அஸ்ஸாமி படித்தால்தான் சோறு கிடைக்கும் என்றால் இன்றைக்கே அஸ்ஸாமி படிக்க துவங்கும் ஆசாமிதான் நான்..!!, இந்த கட்டுரையின் நோக்கமே தவறாக புரிந்து கொண்டிருக்கும் விஷயங்களை தெளிவுபடுத்துவதுதான்.

இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்விக்கு உடனே எல்லோரும் சொல்லும் பதில் ஹிந்தி. அதுவும் நீங்கள் ஹிந்தி பேசும் மக்களுடன் இருக்கும் போது , அவர்கள் ஹிந்தியில் பேச்சை துவங்க நீங்கள் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என சொல்ல " அரே..!! ஹிந்தி... ராஷ்டிர பாஷா.!! As a Indian.. you should learn our national language.. " என்ற அறிவுரை உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். நானும் ரொம்ப நாட்களாக இந்த பாழாய் போன தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இப்புடி செஞ்சிபுட்டான்களே என்று திட்டிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் Wikipedia வில் இந்தியாவை பற்றி படிக்க நேர்ந்தது. விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் கிடையாது. அதாவது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை, அதனால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. அதே சமயம் ஹிந்தியும், ஆங்கிலமும் Official Language என்று வரையருக்கப்பட்டுளன. இதன் அர்த்தம் என்னவென்றால் மத்திய அரசாங்கத்திற்கும் அதன் சார்ந்த துறைகளுக்கும், மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இந்த இரண்டு மொழிகளும் Official Language ஆகும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் Official Language தேர்வு செய்யும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 மாநிலங்களே (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார் , டெல்லி, ராஜஸ்தான் ) ஹிந்தியை அந்த மாநில Official Language ஆக தேர்வு செய்துள்ளன. ஆக இந்த 5 மாநிலங்களை தவிர மற்ற மாநில அரசுகளுடனோ அல்லது அந்த அரசு சார்ந்த துறைகளுடனோ நடைபெறும் பரிவர்த்தனம் ஆங்கிலமோ அல்லது அந்த மாநில Official Language -லோ நடைபெற வேண்டும். உதாரணமாக மகாராஷ்டிரா அரசுடன் நடைபெறும் communication மராட்டியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும். இதன்படி பார்த்தாலும் மத்திய அரசின் Official Language இல் ஒன்றான ஹிந்தியின் மூலம் மேற்சொன்ன 5 மாநில அரசுகளுடன்தான் பரிவர்த்தனம் செய்யமுடியும். ஆனால் ஆங்கிலத்தின் மூலம் அனைத்து மாநில அரசுகளுடனும் பரிவர்த்தனம் செய்ய முடியும் என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக புரிகிறது.

இதில் நீதித் துறை சற்றே வித்தியாசமானது. ஒவ்வொரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் எந்த மொழியில் வாதிடலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் டெல்லி உச்ச நீதி மன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு உயர் நீதி மன்றம் தமிழில் வாதிட உச்ச நீதி மன்றத்திடம் அனுமதி கேட்டு அதுவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம்.

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு பிரபல கம்பனியின் பிஸ்கட் பாக்கெட்டில் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப் பட்டு உள்ளதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கின் விபரம்:
 " இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது தண்டனைக்குரியது..!!"
வழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது,
 "இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் ஹிந்தியை தேசிய மொழி என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ..ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது..".

இது என்னுடைய சொந்த புனைவு அல்ல. இதற்கான ஆதாரம் இதோ இங்கே:

Times Of India:
http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi

The Hindu:
http://www.thehindu.com/news/national/article94695.ece

உண்மை இப்படி இருக்க அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இவ்வாறு தவறாக சொல்லித் தரப்படுகிறது? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
இதே போல இந்தியாவின் தேசிய கீதம் "ஜன கன மன கதி .." நிறையபேர் ஹிந்தியில் எழுதப்பட்டது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது பெங்காலி மொழியில் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை.
இன்னொரு கொசுறு உண்மை, அமெரிக்காவுக்கும் தேசிய மொழி இல்லை. ஏனென்றால் அமெரிக்ககா விடுதலை அடைந்த போது அப்போது இருந்த ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு சிறுபான்மை மக்களை கருத்தில் கொண்டு
 ஆங்கிலத்தை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.
இனி உங்களை யாராவது இந்தியாவின் தேசிய மொழி எது? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை முடிக்கின்றேன்.
வாழை இலையில் சாப்பிட்டால் ஆயுள் கூடும்

பலதரப்பட்ட உணவுகளாக இருந்தாலும், நமது கலாசாரப்படி வாழை இலையில் சாப்பிடுவதுதான் ருசியானது. அதிலும் தலைவாழை இலை போட்டு விருந்து என்றாலே மகிழ்ச்சி தோன்றும். அனைவரது மனதிலும் நமது பாரம் பரியத்தின் மிச்சம் கொஞ்சம் கிடக்கிறது. அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மனதில் ஆசை எழும்புகிறது. இவை மரபணுவில் ஊறியவை. நாகரிகத்தின் பெயரால் நாம் சிதைத்த உணவு பழக்கங்களில் வாழை இலைக்கே முதலிடம்.

வாழைக்கு முதலிடம்:
சல்பர்டை ஆக்சைடு, பாலிவினைல் குளோரைடு, டையாக்சின், எத்திலின், பாலிஸ்டிரின் போன்ற புற்று நோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த பிளாஸ்டிக் தட்டுகள், ஹார்ட் பேக்குகள், பாலிதீன் சீட்டுகள் தான் நமது தட்டுகளாகிவிட்டன. புது வீட்டில் பால் காய்ச்சி வாழை மரத்தை கட்டுவது முதல், திருமணம் போன்ற மங்களகரமான நிகழ்வுகள் அனைத்திற்கும் வாழை மரத்துக்கே முதலிடம். சாமிக்கு வாழையிலையில் படையல் போட்டு விட்டு, பிளாஸ்டிக் தட்டில் நாம் சாப்பிடுவதே மங்கள நிகழ்வுகளாகி விட்ட சூழ்நிலையில் நமது வயிற்றுக்குள் செல்லும் ஆபத்தை நாம் உணர வேண்டாமா? சூடான உணவுகளை வைப்பதால் பிளாஸ்டிக் தட்டுகள், தாள்களில் கிளம்பும் ஸ்டிரின், பைஸ்பீனால் போன்ற நச்சு வாய்வுகளானது இதய குழாய் அடைப்பு, சிறுநீரகம், ரத்த புற்று நோய்,
மலட்டுத்தன்மை, ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

வாழை இலை சத்துக்கள்:
நாம் சாப்பிடும் வாழை இலையில் உள்ள சத்துக்கள் என்ன தெரியுமா?
உடல் எடை கூட விடாமல் தடுக்கும் நார்ச்சத்து, உடலில் உப்புகளை சரியாக வைத்திட பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்புச் சத்துக்கள், கண்களை பாதுகாத்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ.சி, மற்றும் கே, குடற்புண்களை ஆற்றும் ஆல்வான்பியின் கிருமிகளை அழிக்கும் பீனால், ரத்தம் உறைவதைத் தடுக்கும் சாலிசிலிக் அமிலம் புற்றுநோய் காரணிகளை அழிக்கும். செல்முதிர் பாதுகாப்பு கலன்கள், நிறமிகள் ஆகியன வாழை இலையில் உள்ளன.
இவையெல்லாம் வாழை இலையின் மேல்புறத்தில் உள்ள குளோரோபில் என்னும் பொருளுடன் பின்னி பிணைந்து காணப்படுகிறது. நீரை தெளித்து வாழை இலையை கழுவி, அதன் மேல் நெய்யை தடவி அந்த இலையில் சூடான உணவுகளை வைக்கும் போது, மேற்கண்ட சத்துக்களெல்லாம் குளோரோபில்லுடன் கரைந்து, உணவுடன் கலந்து விடுகின்றன. இதனால் ஒவ்வொரு முறை வாழை இலையில் சாப்பிடும் பொழுதும் நமக்கும் ஆயுள் கூடுகிறது.

வாழை இலை சாலட்:
வாழை இலையை சாப்பிடும் தட்டாக மட்டுமல்ல, சாலட் அல்லது டீ செய்து சாப்பிடவும் பயன்படுத்தலாம். வாழை இலைகளை கழுவி சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இதன் எடைக்கு எடை தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். வாழை இலை துண்டுகளை மிக்சியில் அடித்து, துணியில் பிழிந்து சாறு எடுத்து, தேன் சேர்த்து, 10 நிமிடங்கள் இளஞ் சூட்டில் அடுப்பில் வைத்து வடிகட்டி, சூடாறிய பின்பு 10 - 15 மி.லி., தினமும் 2- 3 வேளை சாப்பிட தோல் சுத்தமாகும். ஈறு வாய் புண்கள், வாய் துர்நாற்றம் ஆகியன நீங்கும்.தயிர்சாதம், லெமன் சாதம் சாப்பிட்டால் சளி பிடிக்குமே என்ற பயமா?
இனி வேண்டாம். தயிர்சாதம் அல்லத லெமன் சாதத்தை அப்படியே சூடாக இலையில் போட்டு சாப்பிடுங்கள். இலையின் குளோரோபில் சூடான சாதத்தில் உருகி, உங்களின் தொண்டையில் தோன்றும் ஒவ்வாமையை தடுத்து விடும்.

வயிற்று புண்ணை குணமாக்கும் வாழை இலையின் குளோரோபில் செல்கள் நீண்ட காலம் அழியாமல் இருக்கக் கூடியவை மட்டுமல்ல, வாய், இரைப்பை, சிறுகுடல் போன்ற பகுதிகளில் உள்ள என்சைம்கள் மற்றும் செரிமான செல்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு துணை புரிகின்றன. அல்சர் நோயினால் ஏற்பட்ட வயிற்று புண்களை வாழை இலை விரைவில் ஆற்றக்கூடியவை. இரைப்பை மற்றும் முன் சிறுகுடலில் தோன்றிய புண்களின் அழுகி சதைகளை கரைத்து விட்டு, புதிய செல்களை தோற்றுவித்து புண்களை ஆற்றும் தன்மை வாழை இலைக்கு உண்டு. ஆகையால் தான் நெருப்பில் சுட்ட புண்களை ஆற்ற வாழை இலையைக் சுற்றுவது நமது வழக்கம்.

வாழை இலையில் உணவு உட்கொள்வதால் இனப்பெருக்கம் செல்களும் பல்கி பெருகுகின்றன. தினமும் 1 வேளை சூடாக உணவை இலையில் வைத்து சாப்பிடுவதால் ஆண் உயிரணுக்கள் அதிகப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உணவின் விஷத்தன்மை கெட்டுப்போன அல்லது விஷம் கலந்த உணவுகளை வாழை இலையில் வைத்தால் இலையின் மேற்புறத்தில் புதிய நிறத்தில் ஒரு வித நீர் உற்பத்தியாகி,
இலையில் ஒட்டாமல் வடிந்து விடும். இதனை வைத்து உணவின் விஷத் தன்மையை அறிந்து கொள்ளலாம். ஆகையால்தான் 'எதிரி விருந்துக்கு அழைத்தாலும் தலை வாழை இலையில் தைரியமாக சாப்பிடலாம்' என முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாத்திரங்களை கழுவ உதவும் காஸ்டிக் சோடா, சுண்ணாம்பு ஆகியவை பாத்திரங்கிளில் ஒட்டி நமது உணவுடன் உள்ளே சென்று வயிற்றுப்புண்களை உண்டாக்குகிறது. ஆனால் வாழை இலையில் சாப்பிடுவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவதில்லை. எப்படி பரிமாறுவது வாழையிலையில் சாப்பிட்டால் சுக போக உணர்ச்சியும், தோலுக்கு பளபளப்பும் உண்டாகும்.
செரிமானக் குறைபாடு, பலகீனம், உடல்வலி, நாட்பட்ட சளி, ருசியின்மை ஆகியன நீங்கும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. உணவு உண்ண அமரவேண்டிய இடத்தை துடைத்து, லேசாக நீர் தெளித்து, அந்த தரையின் மேல் நுனி இலை உண்பவரின் இடப்பக்கமும், அடி வலப்பக்கமும் இருக்கும் படி நீரால் கழுவி சுத்தம் செய்த இலையை விரிக்க வேண்டும். இலையை விரித்த பிறகு அதன் மேல் கொஞ்சம் நீரை வலது கையால் தெளித்து, துடைத்து ஒரு சொட்டு நெய்யை இலையில் விட்டு, அதன் மேல் உணவு பதார்த்தங்களை பரிமாற வேண்டும். உறவினர்களுக்கு விருந்து அளிக்கும் போது மேற்கு பார்த்தும், சாதுக்கள், ஞானிகளுக்கு வடக்கு பார்த்தும், அவர்கள் அமர்ந்து உண்ணும் படி இலை விரிக்க வேண்டும்.
முதலில் நுனி இலையிலிருந்து உப்பு, சட்டினி, ஊறுகாய், பச்சடி, காய்கறி, வடகம், வடை, சித்திரான்னம், அப்பளம், ஆகியவற்றை பரிமாறி, அதன் அருகில் மூன்று வாழை இலை தொன்னைகளில் தனித்தனியே கூட்டு ரசம் மற்றும் குழம்பு வைத்து பனியாரம், பாயாசம் வைத்து இறுதியாக சோறும் அதன் அருகில் மற்றொரு தொன்னையில் நெய்யும் வைத்து உபசரிக்க வேண்டும் என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. வாழை இலையில் உணவு உண்பதால் நீர் சேமிக்கப்படும். வீரியமான வேதி பொருட்களால் உருவாக்கப்பட்ட உலோக, பிளாஸ்டிக் பாத்திரங்களின் நச்சுத்தன்மை நம்மை தாக்காது. அது மட்டுமல்ல நமது இலை நமது வீட்டு ஆடு, மாடுகளுக்கு ஆரோக்கியமான உணவளிக்கும் சாதனம் மட்டுமல்ல, நமது மண்ணின் மரபு.
நமது பாரம்பரியத்தின் அடையாளம். நமது சந்ததியினருக்கும் இதனை அடையாளம் காட்ட தினம் ஒரு வேளையாவது வாழை இலையில் உணவு உட்கொள்வோம்

Thursday, July 3, 2014

ஐ.ஏ.எஸ். பணிநிலை என்பது என்ன?

அரசு என்பது ஒரு அறக்கட்டனை மாதிரி. அரசின் அதிகாரிகள்தான், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள். அந்த இரண்டுமே மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரி
இந்தியாவின் உயர்ந்த ஆட்சிப் பணி அதிகாரிதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனப்படுகிறார். ஆங்கிலேயர் காலத்தில் ஐ.சி.எஸ் (Indian Civil Service) என்று இருந்தது, சுதந்திர இந்தியாவில் IAS (Indian Administrative Service) என்று பெயர் மாற்றப்பட்டது.
இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை நிர்வாகப் பதவிகளை வகிக்கிறார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால், அரசு இயந்திரத்தை தலைமையேற்று இயக்குபவர்கள் இவர்களே.
அரசு என்பது வேறு. அரசு இயந்திரம் என்பது வேறு. ஏனெனில், ஆட்சிக்கு வருபவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.
எனவே, அரசு அவ்வப்போது மாறும். ஆனால், அரசு இயந்திரம் மாறாது. அது, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டே இருக்கும்.
ஒரு அரசாங்கம் (Ministry) எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு இயந்திரம்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகிய இரண்டிலும் பணியமர்த்தப்பட முடியும்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மத்திய அரசில் பணியமர்த்தப்படுவார் மற்றும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் பணியமர்த்தப்படுவார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பவர், சமூகத்தில் உயர்ந்த மதிப்பு பெற்றவராக திகழ்கிறார்.
நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று சொல்வதை ஏறக்குறைய 60% இந்திய மாணவர் சமூகம் வழக்கமாக வைத்துள்ளது, பலருக்கு அதைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாமல் இருந்தாலும்கூட.

ஐ.ஏ.எஸ். எனும் பணி
ஐ.ஏ.எஸ். என்பது அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தும் பணி என்பதால், ஒரு நேர்மையான அதிகாரியால், சமூகத்திற்கு நிறைய சேவைகளை செய்ய முடியும்.
ஆனால், இப்பணியில் உள்ள அதிகாரம், சலுகைகள், வெகுமதிகள், சமூக அந்தஸ்து உள்ளிட்ட பல காரணங்களே, இப்பணிக்கு வர வேண்டும் என்று பலரைத் தூண்டுகிறது.
ஐ.ஏ.எஸ். பணி என்பது இந்திய நிர்வாக கட்டமைப்பில், அதிக அதிகாரத்தையும், அதிக பொறுப்பையும் கொண்டதாகும்.
மத்திய அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் கேபினட் செயலாளர் என்ற பதவியிலும், மாநில அரசின் உத்தரவுகளை செயல்படுத்தும் தலைமைச் செயலாளர் என்ற பதவியிலும் இருப்பவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே.
ஐ.ஏ.எஸ். பணி நிலைக்கு சமமாக, இந்திய வெளியுறவு பணிகள் (Indian Foreign Service) எனப்படும் பணி உள்ளது.
ஆனால், உள்நாட்டு நிர்வாகத்தில் இதற்கு சம்பந்தமில்லை. உள்நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை, IAS பணிதான் உயர்ந்தது.
இதற்கு அடுத்த நிலையில் ஐ.பி.எஸ்.(இந்திய காவல் பணிகள்) வருகிறது. அதற்கடுத்து IFS (Indian Forest Service) எனப்படும் இந்திய வனப் பணிகள் வருகின்றன.

IAS பணிக்கு தேவையான தகுதிகள்
நேர்மறை எண்ணம்
தலைமைத்துவ பண்பு
ஆளுமைத் திறன்
தைரியம்
உறுதியான மனப்பாங்கு
தன்னம்பிக்கை
ஒவ்வொரு நெருக்கடி சூழலிலும் அமைதியைக் கடைபிடித்தல்
நல்ல தகவல்தொடர்பு திறன்
நல்ல அறிவுத்திறன்
சிறப்பான பொதுஅறிவு

ஐ.ஏ.எஸ். தேர்வெழுதுவதற்கான அடிப்படை தகுதிகள்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளின் மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள். அத்தேர்வை எழுதும் ஒருவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த ஒருவர், ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதலாம்.
மேலும், பட்டப் படிப்பு இறுதித் தேர்வை எழுதப் போகிறவர்கள் அல்லது எழுதி முடித்து, தேர்வு முடிவுகளுக்கு காத்திருப்பவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வின், முதல்நிலைத் தேர்வை(Preliminary) எழுதலாம்.
MBBS அல்லது வேறொரு மருத்துவ பட்டப் படிப்பை மேற்கொள்வோர், அவர்கள் தங்களின் இறுதியாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்து, அதேசமயம், இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்யாமல் இருந்தாலும்,
அவர்கள் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வை எழுதலாம். அதேசமயம், அவர்கள், மெயின் தேர்வு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐ.ஏ.எஸ். தேர்வு, முதல்நிலைத் தேர்வு (Preliminary), மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

பணிகள் மற்றும் பொறுப்புகள்
* தொடர்புடைய அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, தனது மாவட்டம் அல்லது பிராந்தியத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதில் உதவுதல்.
* மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள், நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்தல்.
இதன்பொருட்டு, அதுதொடர்புடைய பகுதிகளுக்கு பயணம் செய்து, அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறதா என்பதைக் கண்காணித்தல்.
அதன்பிறகு, நடைபெறும் பணிகள் பற்றி, தொடர்புடைய அமைச்சகத்திற்கு தனது கருத்துக்களை(feedback) தெரிவித்தல்.
* பொது நிதியானது, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முக்கியப் பணியாகும்.
அதில், ஏதேனும் முறைகேடு நடந்தால், அவர் மாநில சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் பதில்சொல்ல வேண்டியிருக்கும்.
* வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழும்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.
அவர்கள், துன்பத்திலிருந்து மக்களை மீட்டு, நிலைமைய கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
* ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களது கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்து, நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து, சிறப்பான முடிவுகளை எடுக்க, அரசுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டியுள்ளது.

பணி நிலை
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பணித்தன்மை என்பது, பன்முகத்தன்மை வாய்ந்தது, சவால் மிகுந்தது, ஆர்வமூட்டக்கூடியது அதேசமயத்தில் நிறைவுத்தன்மை கொண்டது.
ஒரு இளநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உருவாக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறார்
மற்றும் அவரும் சீனியர் நிலைக்கு உயரும்போது, கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவரும் சேர்ந்து உருவாக்குகிறார்.
பொதுத்துறை நிறுவனங்கள் சம்பந்தமான விவகாரங்களை கையாளுதல் உள்பட, பல சிக்கல்களை தீர்த்து வைக்கும் நபராகவும் இருக்கிறார்.

சம்பளம்
Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100
கிரேடு pay ரூ.5,400
சீனியர் டைம் ஸ்கேல்
Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100
கிரேடு pay ரூ.6,600
ஜுனியர் Administrative கிரேடு
Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100
கிரேடு pay ரூ.7,600
Selection கிரேடு
Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100
கிரேடு pay ரூ.8,700
சூப்பர் டைம் ஸ்கேல்
Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100
கிரேடு pay ரூ.10,000

வாய்ப்புகள்
உள்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான், ஐ.பி.எஸ். அதிகாரிகளை வழிநடத்தும் பொறுப்பை வகிக்கிறார்.
நிதித்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஒரு அரசின் அனைத்து நிதி செயல்பாடுகளுக்கும் தலைவர்.
சுருக்கமாக சொல்வதென்றால், ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி என்பது, பல்வகை பொறுப்புகளை நிறைவேற்றும் மற்றும் அவற்றை மாறிமாறி மேற்கொள்ளும் நிலையில் உள்ள ஒரு பணியாகும்.
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நேரடியாக உதவக்கூடிய ஒரு பணியாகும்.
நாட்டின் உயர்ந்த பதவியாக உள்ள ஐ.ஏ.எஸ்., பணியில் ஒருவருக்கான பொறுப்புகள் எவ்வளவு அதிகமோ, அந்தளவிற்கு சலுகைகளும் அதிகம்.
நாம் செய்ய வேண்டியது
இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டின் நிர்வாகத்தை நடத்துபவர்கள் என்பதால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால், சமூகத்திற்கு எத்தனையோ நன்மைகள் கிடைத்துள்ளன.
அதே நேரத்தில், பல தீமைகளும் சமூகத்திற்கு நிகழ்ந்துள்ளன.
எனவே, பெரியளவில் நன்மை செய்ய இயலாவிட்டாலும், முடிந்தளவு, தீமை செய்யாமல் இருப்போம் என்பதை உறுதியாக எடுத்துக்கொண்டு, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகுங்கள் மாணவர்களே!
விவசாயிகளின் கோரிக்கை மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:

*விவசாய பொருட்களை சந்தைப்படுத்த, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, குளிரூட்டப்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

*நதிகளை இணைப்பது மட்டுமின்றி, தேவையான இடங்களில் கதவணைகள், தடுப்பணைகள் கட்டவேண்டும்.

*60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு, மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

*இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின், பயிர் கடன்களை தள்ளுபடிசெய்ய வேண்டும். 4 சதவீத வட்டியில், வேளாண் நகைக்கடன் வழங்க வேண்டும்.

*'ஜப்தி' நடவடிக்கைகள் எடுப்பதை ஒழிக்க வேண்டும். சிட்டா அடங்கலை வைத்து, நான்கு லட்சம் ரூபாய் வரை பயிர் கடன் வழங்க வேண்டும்.

*ஊராட்சி ஒன்றியம் வாரியாக, குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும்.

*முழுவதும் உள்ள விவசாயிகளிடம் நல வரியை வசூலிக்க வேண்டும். வெள்ளம், வறட்சி, புயலால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது, நல வரியில் இருந்து நிவாரண தொகை வழங்க வேண்டும். இதற்கு என, தனி வாரியம் அமைக்க வேண்டும்.

*தனி நபர் பயிர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி, விவசாயிகளின்,' பிரீமியம்' தொகையை, அரசே செலுத்த வேண்டும்.

*நாட்டின் தேவைக்கான சர்க்கரை போக, மீதமுள்ள சர்க்கரையை ஏற்றுமதி செய்ய ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கரும்பு பாகில் இருந்து, 'எத்தனால்' எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

*மானாவாரி நிலங்களில், சோளம் பயிரிட்டு அதில், இருந்து, 'எத்தனால்' எடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

*எரிபொருளில், 'எத்தனால்' பயன்பாட்டை, 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதன் மூலம், வாகன எரிபொருளுக்காக, செலவிடப்படும், எட்டு லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி மிச்சப்படும்.

*ஆந்திர மாநில அரசு, கரும்பு கொள்முதல் வரியாக, ஒரு டன்னுக்கு, 60 ரூபாய் வசூல் செய்து, அதை விவசாயிகளுக்கு வழங்குகிறது. இத்திட்டத்தை தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும்.

*விவசாய விளைபொருள் நிர்ணய ஆணையத்தை உருவாக்க வேண்டும். இதில், மத்திய, மாநில வேளாண் அதிகாரிகள் மட்டுமின்றி, விவசாயிகளையும் உறுப்பினர் ஆக்க வேண்டும்