Wednesday, April 3, 2013

புதிய வர்த்தகம்



களிமண்ணைப் பயன்படுத்தி, செங்கல் செய்வர். செங்கல் செய்ய, நீர்நிலைகளில் இருந்து தான் களிமண் எடுப்பர். தற்போது நீர்நிலைகள் இல்லை. நீர்நிலைகள் இல்லாததால் மண்ணும் இல்லை. இதனால் செங்கல் தயாரிக்கும் சூளைகளுக்கு மண் கிடைக்காத சூழல் உள்ளது. தற்போது மழையின்றி விவசாயம் பொய்த்து வருவதால், விளைநிலத்தில் இருந்து மண் எடுக்கப்படுகிறது. இதற்கென நிலங்களை விற்க வேண்டிய அவசியம் இல்லை. மண்ணை மட்டும் விற்றால் போதுமானது. பல கிராமங்களில் தற்போது இந்தப் புதிய வர்த்தகம் தான் நடைபெறுகிறது. மேற்பரப்பில் காணப்படும் வளமான மண் அனைத்தும் விவசாயத்திற்கு பயன்படாமல், செங்கல் சூளை நிறுவனங்களுக்கு பயன்படுகின்றன. இதனால் மழை பெய்து, விவசாயம் நடைபெறும் போது விளைச்சல் குறையும்.

No comments:

Post a Comment