ஊறுகாய்
வெயில் காலத்தின் துவக்கம், மாவடு / ஊறுகாய் சீசன். கோடை காலத்தில் மாங்காய் ஊறுகாய் பரவலாக காணப்படும். இந்தியாவில் மட்டுமல்ல, ஜப்பானிலும் விருந்தில் கடைசியாக பரிமாறப்படும் உணவு ஊறுகாய் வகை. இந்தியாவில் மாநிலங்களைப் பொறுத்து ஊறுகாய் வகைகள் மாறுபட்டாலும் 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் என எங்கும் மாங்காய் ஊறுகாய் பொதுவான ஊறுகாயாக உள்ளது. ஆந்திராவில் மாங்காய் ஊறுகாயை அதன் கொட்டையுடன் நறுக்கி, ஆவக்காய் ஊறுகாய் என செய்வர். இது தவிர கோங்குரா ஊறுகாய், கேரளாவில் பச்சை மிளகு ஊறுகாய், ஜாதிக்காய் ஊறுகாய், காசியில் பேரீச்சம்பழ ஊறுகாய், காஷ்மீரில் ஆப்பிள் ஊறுகாய், பஞ்சாபில் டர்னிப், கேரட், காலிபிளவர் ஊறுகாய், மகாராஷ்டிராவில் பச்சை மஞ்சளில் ஊறுகாய் செய்வர். உடலுக்கு தீங்கு, ஊறு செய்வதால்தான், ஊறுகாய் என பெயர் வந்தது என, இயற்கை மருத்துவம் கூறுகிறது.

No comments:
Post a Comment