Tuesday, October 1, 2013

எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் கழிவுகள்

தமிழகத்தில் பெருகிவரும் உடைந்த, தேவையற்ற "-கழிவுகள்' எனப்படும் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றன.

உடைந்த, பயனற்ற கம்ப்யூட்டர்கள், வீடியோ கேம்கள், மொபைல் போன்கள், சி.டி.,கள், டி.வி.டி.,கள், டிவி டிஸ்பிளேகள், மவுஸ், சிப்ஸ், மதர்போர்டு போன்ற எலக்ட்ரானிக் பொருட்களும், பிரிட்ஜ், ஓவன், வாஷிங்மிஷின், அலாரம், ஏர்ஹாரன் போன்ற எலக்ட்ரிக் பொருட்களும் "-கழிவுகளாக கொட்டப்படுகின்றன. "பெர்சனல் கம்ப்யூட்டர்கள்' அதிகம் வந்த பின் -கழிவுகள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 5 கோடி கம்ப்யூட்டர்கள் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில், 7.5 கோடியை தாண்டும். முன்பு ஒரு கம்ப்யூட்டரின் ஆயுள் 5 முதல் 7 ஆண்டுகள். தற்போது 2 முதல் 3 ஆண்டுகளாகி விட்டது. நாடு முழுதும் ஐம்பது லட்சம் பழைய கம்ப்யூட்டர்கள் சிதைந்து உள்ளன. இக்கழிவுகள் மக்காதவை. இக்கழிவுகளில் பெலாடியம், வெள்ளி போன்ற உலோகங்களும், தீங்கு விளைவிக்கக்கூடிய காரீயம், காட்மியம், பாதரசம் போன்ற உலோகங்களும் உள்ளன. -கழிவுகள் டில்லி, மும்பை, சென்னை, பெங்களூருவில் அதிகம் கொட்டப்படுகின்றன. மும்பையில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு, 25,350 டன் - கழிவுகள் கிடைக்கின்றன. உபயோகமற்ற பேட்டரி செல்களும் கொட்டப்படுகின்றன. இதனால் நீர், நிலம், காற்று ஆகியவை அதிகம் பாதிக்கப்படுகின்றன. இக்கழிவுகளில், 5 சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகிறது. மீதி 95 சதவீத கழிவுகளை ஒன்றும் செய்வதில்லை. -கழிவுகள் கொட்டுவதில், இந்திய அளவில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. தமிழகத்திற்கு 2-வது இடம். ஆண்டிற்கு 13,486 டன் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

சென்னை, கோவை, மதுரையில் இக்கழிவுகள் அதிகம் கொட்டப்படுகின்றன. தமிழகத்தில் அரசு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இவை பயனற்று போகும் போது கழிவுகளின் அளவு அதிகரிக்கும். -கழிவுகள் வெளியேறுவதில் தமிழகம் முதல் இடத்திற்கு செல்லும். இக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையங்கள் டில்லி, மீரட், பெரோசாபாத், பெங்களூரு, மும்பையில் உள்ளன. சென்னை, மதுரையில் மறுசுழற்சி செய்பவர்கள் குறைவு. இதனால் இக்கழிவுகளால் தீமை அதிகரிக்கும். அதிகரித்து வரும் இக்கழிவுகளால் ஏற்படும் பிரச்னையை தீர்ப்பது குறித்து, மதுரை காமராஜ் பல்கலை சுற்றுச்சூழல் துறை தலைவரும், .நா.சபையின் தெற்கிழக்காசிய இயற்கை வளப்பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான முத்துச்செழியன் கூறியதாவது: உடைந்த, பயனற்ற அங்கீகரிக்கப்பட்ட -கழிவுகளை, எந்த நிறுவனம் இச்சாதனங்களை உருவாக்கி,விற்பனை செய்ததோ அவர்களிடமே வழங்க வேண்டும். இச்சாதனங்களை முழுமையாக பிரித்து அதன் பின் "டிரீட்மென்ட்'க்கு அனுப்பி உலோகங்களை காய்ச்சி வடித்து பிரிக்கலாம். வெளிநாடுகளில் இருந்து, இக்கழிவுகளை இறக்குமதி செய்ய அனுமதிக்ககூடாது. உள்ளாட்சி கழிவுகளை ஊருக்கு வெளியே வைப்பது போல 5 கி.மீ., தள்ளி கிடங்குகளில் வைக்க வேண்டும். பிற திடக்கழிவுகளுடன் -கழிவுகளை சேர்க்ககூடாது. -கழிவுகளை தடுப்பது குறித்து கடுமையான சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இயற்ற வேண்டும். இக்கழிவுகளின் அபாயம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும், என்றார்.
-கழிவுகளால் கெடுதிகள்:
 
துத்தநாகம்-மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும், ரத்த ஓட்டத்தையும், சிறுநீரக செயல்பாடு, உயிரணு உற்பத்தி, சுரப்பிகளையும் பாதிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்கும். காட்மியம்: சிறுநீரகம், கல்லீரல். இருதயம் ஆகியவற்றை பாதிக்கும்.பாதரசம்: குழந்தைகளின் மூளைவளர்ச்சி, கர்ப்பபை, சிறுநீரகத்தை பாதிக்கும்.குரோமியம்: மரபணுக்களை பாதிக்கும்.பிளாஸ்டிக்: வெளியாகும்"டையாக்சின்' அனைத்து பாதிப்புகளையும் தரும்.பேரீயம்: மூளை தசைவீக்கம், தசைநார் வளர்ச்சி, கல்லீரல், இருதயம், மண்ணீரல், பித்தப்பை பாதிக்கும்.பெரீலியம்: "கம்ப்யூட்டர் மதர்போர்டில்' இது இருக்கும்.புற்றுநோய், தோல்நோய் ஏற்படுத்தும்.டோனர் கழிவுகளால் புற்றுநோய், மூச்சுக்குழல் அடைப்பு போன்றவை ஏற்படும்.

No comments:

Post a Comment