கல்லிடைக்குறிச்சி
அப்பளம்
தமிழில் "அப்பளித்து' என்றால், சமன் செய்தல் என அர்த்தம். மாவை உருட்டி பின், சமன் செய்வதால் தான் அப்பளம் எனப் பெயர் வந்தது. வடமொழியில் "பப்படஹ' என்றால் பொரிதல் என அர்த்தம். அதனால் தான் "பப்பட்' என பெயர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் கல்லிடைக்குறிச்சி அப்பளத்திற்கு பெயர் பெற்றது. கல்லிடைக்குறிச்சி அரிசி அப்பளம் வெளிநாடு களுக்கும் செல்கிறது. புளிக்குழம்புக்கு அரிசி அப்பளம், சாம்பாருக்கு உளுந்து அப்பளம் என உணவியல் சார்ந்த வழக்கம் உண்டு. நாகர்கோவில் பகுதியில் ஏழிலைக்கிழங்கு என்னும் மரவள்ளிக்கிழங்கு மாவில் அப்பளம் செய்வர். முன்பு பிரண்டைச்சாறு சேர்த்து அப்பளம் செய்வர். தற்போது சமையல் சோடா சேர்க்கின்றனர். விருந்தோடு தொடர்புடைய உணவுப்பொருள் என்பதால் சிரார்த்தம் போன்ற நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியில் அப்பளம் பரிமாறும் வழக்கம் இல்லை.

No comments:
Post a Comment